போதை மாத்திரை சப்ளை செய்த ரவுடி கைது

ஏழுமலையுடன் போதை மாத்திரைக்காக செல்போனில் பேசியவர்கள் குறித்த விவரத்தை தயார் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதை மாத்திரை சப்ளை செய்த ரவுடி கைது
Published on: 
Summary

விசாரணையில் கைதானவர் திருப்பூரை சேர்ந்த ஏழுமலை என்பதும் இவர் ஏற்கனவே சைதாப்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது.

நாக்பூரில் இருந்து கொரியர் மூலம் வலி நிவாரணி போதை மாத்திரைகளை சென்னை சைதாப்பேட்டை பகுதிக்கு வரழைத்து புழக்கத்தில் விடுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து தனிப்படை போலீசார் நேற்று சம்பவ இடத்துக்கு மாறுவேடத்தில் விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது ஒரு வாலிபர் கொரியர் பார்சல் எடுத்து வரும் போது அந்த வாலிபரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர்.

போதை மாத்திரைக்கள்

அப்போது அதில் 500 போதை மாத்திரைக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் கைதானவர் திருப்பூரை சேர்ந்த ஏழுமலை என்பதும் இவர் ஏற்கனவே சைதாப்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது.

போலீசார் வழக்கு

பின்னர் ஏழுமலை மீது போலீசார் வழக்கு பதிந்து 500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறைசாலையில் அடைத்தனர்.

மேலும் ஏழுமலையுடன் போதை மாத்திரைக்காக செல்போனில் பேசியவர்கள் குறித்த விவரத்தை தயார் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com