சேலம் மாநகர சாலைகள் வெள்ளக்காடாக மாறியது

மழையால் சேலம் மாநகரில் பல்வேறு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சேலம் மாநகர சாலைகள் வெள்ளக்காடாக மாறியது
Published on: 
Summary

திருவாக்கவுண்டனூர், சத்திரம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து ஆறாக ஓடியது. மேலும் பல சாலைகள் சேறும் சகதியுமாக மாறியது.

சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று பிற்பகல் வானில் திடீரென கருமேகங்கள் திரண்டன. பின்னர் மழை பெய்ய தொடங்கியது.

கன மழை

இந்த மழை குறிப்பாக அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்ைட, கிச்சிப்பாளையம், குகை, லீ பஜார், சீலநாயக்கன்பட்டி, நெத்திமேடு, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழையாக கொட்டியது. இந்த மழையால் சேலம் மாநகரில் பல்வேறு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக நெத்திமேடு, கொண்டலாம்பட்டி, லீ பஜார், 4 ரோடு, 5 ரோடு, அத்வைத ஆசிரம ரோடு, கிச்சிப்பாளையம், திருவாக்கவுண்டனூர், சத்திரம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து ஆறாக ஓடியது. மேலும் பல சாலைகள் சேறும் சகதியுமாக மாறியது. சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் தத்தளிக்கு ம் நிலை ஏற்பட்டது.

ஸ்தம்பித்து நின்ற வாகனங்கள்

சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சீலநாயக்கன்பட்டி முதல் குரங்குச்சாவடி வரை சாலையை மூழ்கடித்த படி மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெளியூர் செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரம் அணி வகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள், பயணிகள் மற்றும் பொது மக்கள் தவியாய் தவித்தனர்.

சேலம் மாநகரில் பெய்த மழையால் பள்ளி, கல்லூரி சென்று விட்டு திரும்பிய மாணவ-மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்கு சென்று விட்டு வீடுகளுக்கு திரும்பியவர்கள் கடும் அவதி அடைந்தனர். சேலம்- ஓமலூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் உள்ள தண்ணீர் கீழே வருவதற்கு அமைக்கப்பட்டுள்ள பைப்புகள் உடைந்ததால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மீது தண்ணீர் கொட்டியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

மேட்டூர், எடப்பாடி

இதே போல மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, கெங்கவல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதிகள் வெள்ளகாடாக காட்சி அளித்தது. மாவட்டத்தில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 68.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 38.2, ஏற்காடு 14, வாழப்பாடி 2.8, ஆைனைமடுவு 14, கெங்கவல்லி 33, தம்மம்பட்டி 13, கரியகோவில் 20, நத்தக்கரை 5, வீரகனூர் 2, சங்ககிரி 44.2, எடப்பாடி 42.6, ஓமலூர் 11 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 308.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

X