

ஊராட்சி நிர்வாகம் கவனத்தில் எடுத்து குப்பையை அகற்றி மழை தண்ணீர் தேங்காத வாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியம் கிராண்ட்லைன் ஊராட்சி கரிகால்சோழன் நகர் 6-வது தெருவில் தேங்கிய குப்பைகள் பல நாட்களாக அள்ளப்படாமல் உள்ளன. இதனால் சமீபத்தில் பெய்த மழை குப்பையுடன் கலந்து மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற கொடிய நோய்கள் உண்டாக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் கவனத்தில் எடுத்து குப்பையை அகற்றி மழை தண்ணீர் தேங்காத வாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் அந்தப் பகுதியை கடந்து செல்லும் போது குப்பையுடன் தேங்கிய மழை நீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகளும் சிரமத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர்.