

மாநாட்டில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடன் அமைச்சர் என்.ஆனந்த் விரிவான ஆய்வுகளை நடத்தினார்.
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் தலைமையில் வெற்றித் தமிழகம் தொலைநோக்கு ஆவணம் செயல்திட்ட முன்னெடுப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான 2-வது மண்டல மாநாடு கோவையில் நடந்தது.
மாநாட்டில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடன் அமைச்சர் என்.ஆனந்த் விரிவான ஆய்வுகளை நடத்தினார்.
மழைக்காலங்களில் பள்ளிகளின் மேற்கூரைகளை சுத்தமாக பராமரிப்பது தூசிகள் மற்றும் கழிவுகள் தேங்காமல் தடுப்பது மழைநீர் முறையாக வெளியேறுவதற்கும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை சென்றடைவதற்கும் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.
இப்பணிகளை எனது தொகுதியான தி.நகர் தொகுதியில் இருந்து உடனே தொடங்குகிறேன்.
இவ்வாறு அமைச்சர் என்.ஆனந்த் பேசினார்.
இதைத்தொடர்ந்து தியாகராய நகர் தொகுதியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் மேற் கூரைகளை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. பருவமழை காலத்தில் பள்ளி மாணவர்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் பாதுகாப்பான சூழ்நிலையில் கல்வி பயில்வதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் நடந்த இந்த பணிகளில் சம்பந்தப்பட்ட ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.