வெங்கல் அருகே சுடுகாட்டுபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்

சுடுகாட்டிற்கு இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல சாலை வசதி இல்லை.
வெங்கல் அருகே சுடுகாட்டுபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்
Published on: 

வெங்கல் அருகே உள்ள மேலானூர் ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் பல ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என்று எரிமேடையுடன் கூடிய சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவரும் உள்ளது. ஆனால் இந்த சுடுகாட்டிற்கு இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல சாலை வசதி இல்லை.

ஆக்கிரமிப்பு

தனியாருக்கு சொந்தமான விளை நிலத்தின் வழியாக செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது. இந்தநிலையில் இந்த சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதனை அகற்றகோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளியூர் கிராமத்தில் உள்ள வருவாய் அலுவலர் அலுவலகம் எதிரே பாடை கட்டி ஒப்பாரி வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாசில்தார்

இந்த நிலையில் திருவள்ளூர் தாசில்தார் சரண்யா தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் மேலானூர் கிராமத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத் தலைமையில் வெங்கல் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு முன்னிலையில்பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சுடுகாடு சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com