போட்டித் தேர்வுகளில் வயது உச்ச வரம்பு தளர்வு - தமிழ்நாடு அரசு உத்தரவு!

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு, அனைத்துப் பிரிவினருக்கும் 5 ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
போட்டித் தேர்வுகளில் வயது உச்ச வரம்பு தளர்வு - தமிழ்நாடு அரசு உத்தரவு!
Published on: 

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பை தளர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

“போட்டித் தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை தற்போதைய விதிகளில் உள்ளதை விட 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

மேற்கண்ட வயது வரம்பு உயர்வானது, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (BC, BC(M), MBC & DNC, SC, ST, ஆதரவற்ற விதவைகள்) ஏற்கனவே உள்ள வயதுச் சலுகையோடு கூடுதலாக அமையும்.

இந்த வயது உச்சவரம்பு உயர்வு இன்று (30.10.2026) முதல் ஐந்து ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும்.

தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவு மூலம், வயது வரம்பு முடிவடையும் நிலையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டித் தேர்வர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் பயனடைவர்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1, குரூப்-2, குரூப்-2 ஏ உள்ளிட்ட அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் இந்த வயது வரம்பு தளர்வு பொருந்தும்.

அதன்படி, குரூப்-1 பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு தற்போது 32-லிருந்து 37 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கான வயது வரம்பு 37லிருந்து 42ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான வயது வரம்பு 42லிருந்து 47ஆகவும், இட ஒதுக்கீட்டைப் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான வயது வரம்பு 47-ல் இருந்து 52-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வில், பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு தற்போது 30-ல் இருந்து 35ஆகவும், இட ஒதுக்கீடு பெறுபவர்களுக்கு வயது வரம்பில்லை என்றும், பொதுப்பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான வயது வரம்பு 40-ல் இருந்து 45 ஆகவும், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Attachment
PDF
DIPR-P.R.NO-941-Hon'ble CM Press Release - Age Relaxation -Date 30.10.2026
Preview
X