இடுக்கியில் கோர சம்பவம்: தமிழ்நாட்டின் இளம்பெண்ணை கொன்று, தீ வைத்து எரித்த இளைஞன்

முறிந்து போன உறவை புதுப்பித்துக் கொள்ள அழைத்து கொலை செய்துள்ளான்.
கொலை
கொலை
Published on: 

தமிழ்நாட்டின் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர் நித்யா (வயது 18). கேரள மாநிலம் இடுக்கி ராஜகுமாரி வட்டப்பாறை பி டிவிசனை சேர்ந்தவன் 19-வது நிஷாந்த். இருவரும் கடந்த 2023-ம் ஆண்டில் இருந்து பழகி வந்துள்ளனர். பின்னர் பிரிந்துள்ளனர். கடந்த 11-ந்தேதி இருவரும் சந்திக்கலாம். தங்களது தொடர்பு குறித்து பேசிக்கொள்ளலாம் என நிஷாந்த், நித்யாவை அழைத்துள்ளான்.

கழுத்தை நெறித்து கல்லால் தாக்கி கொலை

அதன்படி பூபராவில் உள்ள தேயிலை தோட்டத்தில் இருவரும் சந்தித்துள்ளனர். மதியம் 2.30 மணியளவில் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது பேச்சுவார்த்தை அதிகரித்து தகராறாக மாறியுள்ளது. அந்த நிலையில் நிஷாந்த், நித்தியாவின் கழுத்தை நெறித்தியுள்ளார். இதில் நித்தியா மயங்கியுள்ளார். தனது கோபம் தீராத நிஷாந்த், கல்லால் நித்யாவை தாக்கியுள்ளார். இதனல் நித்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்துடன் நிஷாந்தின் கோபம் தீரவில்லை.

பெட்ரோல் ஊற்றி உடல் எரிப்பு

இரவு 10 மணியளவில் ஆட்ரோ ரிக்ஷாவில் நித்யாவின் உடலை ஏற்றி, பம்ப்ளா அணை பகுதிக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பெட்ரோல் ஊற்றி உடலை எரித்துள்ளான். எரியப்பட்ட நிலையில் பெண் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு, நிஷாந்த் தலைமறைவான நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிஷாந்தை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com