சென்னையில் இன்று முதல் சீரான குடிநீர் விநியோகம்

பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்காக ஏற்கனவே அப்பகுதிகளில் இயங்கி வரும் குடிநீர் லாரிகள் மட்டுமல்லாமல் கூடுதலாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டது.
சென்னையில் இன்று முதல் சீரான குடிநீர் விநியோகம்
Published on: 

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குடிநீர் குழாய் மாற்றியமைக்கும் பணிகள் கடந்த 11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை மேற்கொள்ளப்பட்டது. இதனால், மண்டலம் 9 (தேனாம்பேட்டை), மண்டலம் 10 (கோடம்பாக்கம்), மண்டலம் 11 (வளசரவாக்கம்), மண்டலம் 12 (ஆலந்தூர்) மற்றும் மண்டலம் 13 (அடையாறு) ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்பட்ட குடிநீர் குறைந்த அளவில் விநியோகிக்கபட்டது.

குடிநீர்

பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்காக ஏற்கனவே அப்பகுதிகளில் இயங்கி வரும் குடிநீர் லாரிகள் மட்டுமல்லாமல் கூடுதலாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, இன்று (திங்கட்கிழமை) அதிகாலை முதல் சீரான குடிநீர் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. மேற்கூறிய பகுதிகளில், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் மேற்கொள்வதற்காக ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த குடிநீர் அளவினை விட தற்போது கூடுதலாக குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X