பள்ளி கொடிகம்பத்தில் காலி மதுபாட்டில்: மதியிழந்து இளைஞர்கள் சீரழிகிறார்கள்- வானதி சீனிவாசன் கண்டனம்

தமிழ்நாடு அரசுக்கு டாஸ்மாக் வருவாய் தான் மிக முக்கியம்.
பள்ளி கொடிகம்பத்தில் காலி மதுபாட்டில்: மதியிழந்து இளைஞர்கள் சீரழிகிறார்கள்- வானதி சீனிவாசன் கண்டனம்
Published on: 
Summary

தேசியக்கொடி ஏற்றும் கொடிக்கம்பத்தின் மீது மது பாட்டிலை கட்டி தொங்கவிட்ட செய்தியானது தேசியக் கொடிக்கும், கொடிக்கம்பத்திற்கும் மிகப்பெரிய அவமரியாதை செய்தி ருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தேனியில் அரசு பள்ளிக் கூடத்தில் தேசிய கொடியேற்றும் கொடிக் கம்பத்தில் விஷமிகள் யாரோ காலி மதுபாட்டிலை கட்டி தொங்க விட்டிருந்த காட்சி வைரல் ஆனது.

இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க மூத்த தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

மது சமுதாயத்தின் பெரும் சாபக்கேடு என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி. தாயை விட, தாய் நாட்டை உயிரினும் மேலாக போற்றும் நாட்டுப் பற்று மிக்கவர்கள் வாழும் நம் நாட்டில், தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் தேச விரோத சக்திகள் சிலர் தேசியக்கொடி ஏற்றும் கொடிக்கம்பத்தின் மீது மது பாட்டிலை கட்டி தொங்கவிட்ட செய்தியானது தேசியக் கொடிக்கும், கொடிக் கம்பத்திற்கும் மிகப்பெரிய அவமரியாதை செய்தி ருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தேசியக் கொடியை கீழே விழாமல் பாதுகாத்து தன்னுயிரைத் தியாகம் செய்த திருப்பூர் குமரன் பிறந்த நாட்டில் மதுவினால் மதியிழந்து இளைஞர்கள் சீரழிவதை காணும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது. தமிழ்நாடு அரசுக்கு டாஸ்மாக் வருவாய் தான் மிக முக்கியம். இளைஞர்கள் எப்படி போனால் என்ன?

இவ்வாறு அவர் கூறினார்.

X