விமான எரிபொருள் மீதான வாட் வரி குறைப்பு: தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த ஏர் இந்தியா

சென்னை விமான நிலையத்தில் வரியை 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகவும், மாநிலத்தின் பிற விமான நிலையங்களில் 1 சதவீதமாகவும் குறைத்துள்ளது.
Air India
Published on: 

வணிகப் பயணிகளுக்கான விமானப் பயணச் செலவுகளைக் குறைக்கவும், மாநிலத்திற்குள் விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளை விரிவுபடுத்த ஊக்குவிக்கவும், தமிழக அரசு மாநிலத்திற்குள் விமானச் சேவைகளுக்காக திட்டமிடப்பட்ட விமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் விமான டர்பைன் எரிபொருள் (ATF) மீதான மதிப்புக்கூட்டு வரியைக் (VAT) குறைத்துள்ளது.

அதன்படி சென்னை விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்கான மதிப்புக்கூட்டு வரி 29%-லிருந்து 16%-ஆகவும், மற்ற விமான நிலையங்களில் 29%-லிருந்து 1%-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

விமான எரிபொருள் (ATF) மீதான மதிப்புக்கூட்டு வரியைக் (VAT) குறைத்ததற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் ஏர் இந்தியா (Air India) தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஏர் இந்தியா தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

சென்னை விமான நிலையத்தில் வரியை 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகவும், மாநிலத்தின் பிற விமான நிலையங்களில் 1 சதவீதமாகவும் குறைத்திருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இது செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்கவும், விமான இணைப்புகளை மேம்படுத்தவும் உதவும்.

நாங்கள் எங்களின் சேவையை மேலும் வலுப்படுத்தவும், தமிழ்நாட்டு மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கவும் இது உதவும்.

என்று தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com