அக்டோபர் மாதம் பிறந்தும் அதிகரிக்கும் வெப்பத்தால் முட்டை உற்பத்தி குறையும் அபாயம்

தென் மாநிலங்களில் சில பகுதிகளில் தனிநபர் நுகர்வு ஆண்டுக்கு 180 முதல் 200 முட்டைகள் வரை உள்ளது.
முட்டை
முட்டை
Published on: 
Summary

அக்டோபர் மாதம் பிறந்து 10 நாட்களாகியும் வெயிலின் தாக்கம் குறையாததால் முட்டை உற்பத்தி வரும் நாட்களில் சரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் பண்ணயைளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

நாமக்கல் மண்டலத்தில் தினசரி 7 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

முட்டை உற்பத்தி

இந்தநிலையில் அக்டோபர் மாதம் பிறந்து 10 நாட்களாகியும் வெயிலின் தாக்கம் குறையாததால் முட்டை உற்பத்தி வரும் நாட்களில் சரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் பண்ணயைளர்கள் கவலை அடைந்துள்ளனர். தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் சார்பில் உலக முட்டை தினத்தை முன்னிட்டு இலவச முட்டை வழங்கும் விழா நாமக்கல்லில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற சங்கத் தலைவர் சிங்கராஜ் கூறியதாவது:-

இந்தியாவில் தனிநபர் முட்டை நுகர்வு முன்பு ஆண்டுக்கு சராசரியாக 70 முதல் 80 முட்டைகளாக இருந்த நிலையில் தற்போது 110 முட்டைகளைக் கடந்துள்ளது. தென் மாநிலங்களில் சில பகுதிகளில் தனிநபர் நுகர்வு ஆண்டுக்கு 180 முதல் 200 முட்டைகள் வரை உள்ளது.

தடுப்பூசிகள்

கோழிகளுக்குத் தவறாமல் தடுப்பூசிகள் செலுத்தப்படுவதுடன், நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கும் உயிர்ப் பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. அதனால் இங்கு பாதிப்பு எதுவும் இல்லை. கோழித் தீவன மூலப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பண்ணையாளர்களுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மக்காச்சோளம்

மக்காச்சோளம் கிலோ ரூ.28 முதல் ரூ.30 வரையிலும், சோயா கிலோ ரூ.70 முதல் ரூ.75 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மக்காச்சோளத்தை அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையில் கிடைக்கச் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அதிகரித்து வரும் வெப்பம், தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் தீவன மூலப் பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவை கோழிப் பண்ணைத் தொழிலுக்குச் சவாலாக உள்ளது. இதனால் முட்டை உற்பத்தி குறையும் அபாயம் உள்ளது, என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நிகழ்ச்சியில் சங்கச் செயலாளர் சுந்தரராஜன், பொருளாளர் இளங்கோ, முட்டை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆனந்தன், முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்கச் செயலாளர் வல்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com