ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு ரஜினிகாந்த், இளையராஜா நேரில் சென்று அஞ்சலி

எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவால் காலமானார்முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர் ஆர்.எம்.வீரப்பன்
ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு ரஜினிகாந்த், இளையராஜா நேரில் சென்று அஞ்சலி
Published on

எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 98.

முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர் ஆர்.எம்.வீரப்பன். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆர்.எம்.வீரப்பனின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த், "ஆர்.எம்.வீரப்பன் எப்போதும் பணத்துக்கு பின்னால் போனதே இல்லை. அவரை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது" என்று தெரிவித்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com