தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமாகி வருகிறது.
Heavy rain
Published on: 

மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக (அர்னாப்) வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமாகி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பரவலாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், இன்று மிக தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக (அர்னாப்) வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

5 மாவட்டங்கள்

கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் மதியம் ஒரு மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2-ம் எண் புயல் எச்சரிக்கை

சென்னை, கடலூர், நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதேபோல், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுவை, காரைக்கால், பாம்பம் துறைமுகங்களில் 2ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு உத்தரவு

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் ஆழ்கடலுக்கு சென்ற விசைப்படகுகள் உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீன்வளத்துறையிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com