2029-ல் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர்- விஜய் வசந்த் எம்.பி. உறுதி

மக்களுக்காக குரல் கொடுக்கும் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்.
Vijay Vasanth MP
Published on

கோவில்பட்டி அருகே ஈராச்சியில் உள்ள பள்ளி விழாவில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நேபாளத்தில் நடந்த துயர சம்பவத்தில் பல உயிர்களை இழந்துள்ளோம். பலர் காணாமல் போய் உள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த வர்களும் உள்ளனர்.

முதலமைச்சர் உடனடியாக அமைச்சர் களை டெல்லிக்கு அனுப்பினார். அங்குள்ளவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

2029-ல் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.

நீட் தேர்வுக்காக டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு அமைப்பினர் தீவிர போராட்டம் நடத்தினாலும், ராகுல் காந்தி பிரதமர் இல்லம் முன்பு முற்றுகையிட்டு அதனை கவனத்துக்கு கொண்டு வந்து, பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என கூறினார்.

பாராளுமன்றத்தில் அவர் பேசும்போது தடுத்தாலும் விடாமுயற்சியுடன் தனது கருத்துக்களை எடுத்து வைத்தார். மக்களுக்காக குரல் கொடுக்கும் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர். த.வெ.க.வினர் அவர்களது கருத்துக்களை கூறியுள்ளனர். எங்களைப் பொருத்தவரை ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்.

2029-ல் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினரின் எண்ணமாக உள்ளது. பிரதமர் மோடியை எதிர்க்கும் சக்தியாக ராகுல் காந்தி உள்ளார். மோடி அரசின் செயல்பாடுகள் மக்களுக்கு நன்றாக தெரியும்.

நீட் தேர்வு பிரச்சி னையில் என்ன நடந்தது என்று அனை வருக்கும் தெரியும். மாற்றம் வேண்டும். இளைஞர்களுக்கான ஆட்சி வேண்டும், மக்களுக்கான ஆட்சி அமைய வேண்டும் என்றால் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com