

மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் அதிகபட்சமாக ஆவடி தொகுதியில் 4 லட்சத்து 39 ஆயிரத்து 953 வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் வீரப்பன் இன்று காலை வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.
மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 23 லட்சத்து 26 ஆயிரத்து 822 வாக்காளர்கள் உள்ளனர். இதில் அதிகப்பட்சமாக சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 898 ஆண்கள், 2 லட்சத்து 85 ஆயிரத்து 714 பெண்கள் மற்றும் 117 பேர் மற்றவர்கள் என மொத்தம் 5 லட்சத்து 58 ஆயிரத்து 729 வாக்காளர்கள் உள்ளனர்.
பல்லாவரம் தொகுதியில் 3 லட்சத்து 38 ஆயிரத்து 686 பேரும், தாம்பரம் தொகுதியில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 636 பேரும், செங்கல்பட்டு தொகுதியில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 772 பேரும், திருப்போரூர் தொகுயில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 510 பேரும், செய்யூர் தொகுதியில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 920 பேரும், மதுராந்தகம் தொகுதியில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 920 பேரும் வாக்காளர்களாக உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் அதிகபட்சமாக ஆவடி தொகுதியில் 4 லட்சத்து 39 ஆயிரத்து 953 வாக்காளர்கள் உள்ளனர். கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 440 பேர், பொன்னேரி தொகுதியில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 399 பேர், திருத்தணி தொகுதியில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 339 பேர், திருவள்ளூர் தொகுதியில் 2 லட்சத்து 52 ஆயிரத்து 865 பேர், பூந்தமல்லி தொகுதியில் 3 லட்சத்து 72 ஆயிரத்து 249 பேர், மதுரவாயல் தொகுதியில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 267 பேர், அம்பத்தூர் தொகுதியில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 397 பேர், மாதவரம் தொகுதியில் 4 லட்சத்து 37 ஆயிரத்து 465 பேர், திருவொற்றியூர் தொகுதியில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 927 பேர் வாக்கா–ளர்களாக உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 32 லட்சத்து 39 ஆயிரத்து 301 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.