மழைக்காலங்களில் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

பொதுமக்கள் தங்களது புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
Minister Adhav Arjuna
Published on: 

சென்னையில் நேற்று இரவு மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டதை தொடர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கட்டுப்பாட்டு அறைகளை ஆய்வு செய்தார்.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் மாநகராட்சி ரிப்பன் மாளிகை, கட்டுப்பாட்டு அறை, எழிலகத்தில் உள்ள மாநிலக் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார்.

பாரிமுனை பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களையும் பார்வையிட்டார். பின்னர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கடந்த 2 மாதங்களாக நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மழை பாதிப்புகளைக் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் தங்களது புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்குவதற்காக 6 முகாம்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

சென்னை மாநகராட்சி 15 மண்டலங்களிலும் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது சாதாரண மழை அல்ல. 8 மணி நேரத்தில் 35 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இருப்பினும், பொது மக்கள் பதட்டமடைய வேண்டாம். மழை முடியும் வரை தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்.

பழைய கட்டிடங்கள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் நடை பெற்று வருகின்றன. பழைய கட்டடங்களில் வசிப்பவர்களை மழைக் காலம் முடியும் வரை பாதுகாப்பான மாற்று இடங்களில் தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com