அருமனையில் மீன் கழிவுகள் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்

துர்நாற்றத்துடன் வந்த லாரி குறித்து அருமனை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அருமனையில் மீன் கழிவுகள் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்
Published on: 
Summary

லாரி சென்ற வழி முழுவதும் பொதுமக்கள் மூக்கை பொத்தியவாறு நின்றனர். அருமனை பகுதிக்கு வந்ததும் அந்த லாரி போக்குவரத்து நெரிசலில் சிக்கி மெதுவாக சென்றது. இதன் காரணமாக அந்த பகுதியே கடும் துர்நாற்றம் வீசியது.

கேரளம் மாநிலத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்குள் இறைச்சி கழிவுகள் கொண்டு வரப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. அதனை தடுக்க மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறையினரும், போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருந்தபோதிலும் அதனையும் மீறி குமரி மாவட்ட எல்லைக்குள் இதுபோன்ற இறைச்சி கழிவு வாகனங்கள் வந்துவிடுகின்றன.

இந்தநிலையில் குழித்துறையில் இருந்து அருமனை வழியாக தமிழக பதிவு எண் கொண்ட கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது. அந்த லாரியில் கடும் துர்நாற்றம் வீசியது.

அருமனை

இதனால் லாரி சென்ற வழி முழுவதும் பொதுமக்கள் மூக்கை பொத்தியவாறு நின்றனர். அருமனை பகுதிக்கு வந்ததும் அந்த லாரி போக்குவரத்து நெரிசலில் சிக்கி மெதுவாக சென்றது. இதன் காரணமாக அந்த பகுதியே கடும் துர்நாற்றம் வீசியது.

இந்தநிலையில் அருமனையில் இருந்து ஆற்றூர் சாலையில் திரும்பி செல்லும்போது அப்பகுதி பொமக்கள் அந்த லாரியை தடுத்து நிறுத்தினர். லாரியை ஓட்டி வந்த டிரைவரிடம் என்ன கொண்டு செல்கிறீர்கள்? என்று கேட்டபோது முன்னுக்குபின் முரணாக தகவல் கூறியிருக்கிறார். இதனால் அந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

மீன் கழிவுகள்

துர்நாற்றத்துடன் வந்த லாரி குறித்து அருமனை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு அருமனை போலீஸ் இன்ஸ்பெட்க்டர் காந்திமதி தலைமையிலான போலீசார் வந்து துர்நாற்றம் வீசிய லாரியை சோதனையிட்டனர். அப்போது அந்த லாரியில் அழுகிய மீன் கழிவுகள் இருப்பது தெரியவந்தது.

அது எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது? எங்கு கொண்டு செல்லப்படுகிறது? என்று டிரைவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கேரளம் மாநிலம் கொல்லத்தில் இருந்து நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள உர தொழிற்சாலைக்கு கொண்டு செல்வதாக டிரைவர் தெரிவித்தார்.

நெடுஞ்சாலையில் நேர கட்டுப்பாடு

நெடுஞ்சாலையில் நேர கட்டுப்பாடு இருப்பதால் இந்த வழியாக வந்தேன் எனவும் அவர் கூறினார். அதிக துர்நாற்றம் வீசக்கூடிய கழிவுகளை பொதுமக்கள் இருக்கும் ஊர்கள் வழியாக கொண்டு வரக்கூடாது என்று லாரி டிரைவரை எச்சரித்து அனுப்பினர்.

கடும் துர்நாற்றத்துடன் இறைச்சி கழிவுகள் கொண்டு வரக்கூடிய வாகனங்களை எல்லையிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதுபோன்ற வாகனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X