பச்சை நிறமாக மாறிய காவிரி நீர்- குமாரபாளையத்தில் பொதுமக்கள் அச்சம்

சில பகுதிகளில் காவிரி கரையோரம் உள்ள தொழிற்சாலைகள் குடிநீர் ஆதாரமாக உள்ள காவிரி நீரை உறிஞ்சி தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
பச்சை நிறமாக மாறிய காவிரி நீர்- குமாரபாளையத்தில் பொதுமக்கள் அச்சம்
Published on: 
Summary

பொதுமக்களில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதால் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது காவிரி நீராகும். தற்போது கர்நாடகா மாநிலத்தில் மழை பொழிவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததால் காவிரி ஆற்றில் தினசரி ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனை சில பகுதிகளில் காவிரி கரையோரம் உள்ள தொழிற்சாலைகள் குடிநீர் ஆதாரமாக உள்ள காவிரி நீரை உறிஞ்சி தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

குடிநீர் விநியோகம்

இந்நிலையில் குமாரபாளையம் காவிரி நகர் பகுதியில் குமாரபாளையம் நகரின் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் குடிநீர் நீரேற்று நிலையம் அமைத்துள்ளது. இந்த குடிநீரேற்று நிலையம் உள்ள பகுதியில் தற்பொழுது பச்சை நிற திரவம் கலந்த நீர் தண்ணீரில் கலக்காமல் தனியாக வருகிறது. மேலும் தண்ணீர் பட்ட பாறைகள் பச்சை நிறமாக மாறி வருகின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரி நீர்

பொதுமக்களில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதால் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உடனடியாக தலையிட்டு காவிரி நீரை பாதுகாத்து தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X