

ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம், அதேபோல் டெல்லி சென்றும் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருச்சியில் இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார்.
இதில் மாநில நிர்வாகிகள் மேகராஜன், தினேஷ், ஏழுமலை, தங்க முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உச்சநீதிமன்றம் மாதாமாதம் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டும், தண்ணீர் திறந்து விடாததால் குறுவை, சம்பா நெல் சாகுபடி செய்ய முடியாததால் விவசாயிகள் கஷ்டத்திலும், நஷ்டத்திலும் உள்ளனர்.
எனவே, கர்நாடக அரசு மீதும், உச்சநீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாத மத்திய அரசு மீதும், ஒரு லட்சம் கோடி நஷ்ட ஈடு கேட்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டு, நஷ்ட ஈடு பெற்று காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் கொடுக்க வேண்டும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு உதாசீனப்படுத்துவதால் தமிழ்நாட்டை தனி நாடாக அறிவிக்க வேண்டும். சம்பா சாகுபடி முழுமையாக பொய்த்து விட்ட நிலையில், தற்போது குறுவை சாகுபடியும் பல்வேறு இடங்களில் கேள்விக் குறியாகி உள்ளது.
ஆகவே விவசாயிகளுக்கு நிவாரணமாக ரூ.5 ஆயிரம் மத்திய அரசு வழங்க வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும். 60 வயதான விவசாயிகளுக்கு மாதம் ரூ.500 பென்ஷன் வழங்கப்படுகிறது, இது எந்த வகையிலும் உதவிகரமாக இல்லை.
எனவே இதை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம், அதேபோல் டெல்லி சென்றும் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.