

மணியின் ஓசை குறைந்தபட்சம் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு எதிரொலிக்கும். மத பாகுபாடு இன்றி அனைத்து தரப்பினருக்கும் ஆலயமணிகள் தயார் செய்து வழங்கி வருகிறோம். இதனிடையே வாகனத்தில் பிரமாண்ட மணி கொண்டு செல்லப்பட்டத்தை மக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.
நாமக்கல் முல்லை நகரை சேர்ந்தவர் காளிதாஸ். இவர் கோவில்களுக்கு மணி, குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தி ராமர் கோவிலுக்கு 1,000 கிலோ எடை கொண்ட ராட்சத மணி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய வகையான மணிகள் தயார் செய்து அனுப்பி வைத்தார்.
இவை நாமக்கல்லில் தயார் செய்யப்பட்டு அங்கு கொண்டு செல்லப்பட்டன. தற்போது 600 கிலோ எடை கொண்ட பிரமாண்ட மணி ஒன்றை பரமத்தி வேலூர் அருகே பில்லூர் படைவெட்டி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவிற்காக ஆர்டரின் பேரில் தயார் செய்துள்ளார். இந்த பிரமாண்ட மணி நேற்று சிறப்பு பூஜை செய்து பில்லூர் படைவெட்டி அம்மன் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
எனது தந்தை ராஜேந்திரன் கோவில்களுக்கு மணி தயாரித்து வழங்கி வந்தார். அந்த பணியை தற்போது நான் எனது குடும்பத்தினருடன் இணைந்து செய்து வருகிறேன். கோவில் மணிகள் தயாரிப்பில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறோம். அயோத்தி ராமர் கோவிலுக்கு 1000 கிலோ எடை கொண்ட மணி தயார் செய்து அனுப்பி வைத்தோம்.
தற்போது பில்லூர் படைவெட்டி அம்மன் கோவிலுக்கு 600 கிலோ எடை கொண்ட கோவில் மணி தயாரிக்கப்பட்டுள்ளது. மணி தயாரிப்பு பணியை 20 பேர் 40 நாட்களில் மணி தயார் செய்து முடித்தோம். பித்தளை, துத்தநாகம், வெள்ளியீயம், செம்பு மற்றும் இரும்பு ஆகிய உலோகங்களைக் கொண்டு மணி தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த மணியின் ஓசை குறைந்தபட்சம் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு எதிரொலிக்கும். மத பாகுபாடு இன்றி அனைத்து தரப்பினருக்கும் ஆலயமணிகள் தயார் செய்து வழங்கி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே வாகனத்தில் பிரமாண்ட மணி கொண்டு செல்லப்பட்டத்தை மக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.