தேனி சிறையில் இருந்து தப்பியோட்டம்: ட்ரோன் உதவியுடன் மேலும் 8 கைதிகள் பிடிப்பு

தப்பியோடிய 17 பேரில் 13 பேர் பிடிபட்டுள்ள நிலையில், மீதமுள்ள 4 கைதிகளைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
prisoners escape
Published on: 

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி கிளைச் சிறையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டது போல நாடகமாடி, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சிறைக் காவலர்களைக் கொடூரமாகத் தாக்கிவிட்டு 17 கைதிகள் ஒரே நேரத்தில் தப்பியோடியுள்ள சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடியதற்கு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்,திமுக தலைவர் மு.க,ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி என பல அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

இந்தச் பாதுகாப்புப் பணியில் குளறுபடி காரணமாக, 9 சிறைக்காவலர்கள் (தலைமை சிறைக்காவலர்கள் 2 பேர், முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் 7 பேர்) பணியிடை நீக்கம் (Suspend) செய்யப்பட்டுள்ளனர். சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்

தப்பியோடிய 17 பேரில் இதுவரை 4 பேர் ஏற்கனவே பிடிப்பட்ட நிலையில் மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 13 கைதிகளைத் தேட 17 தனிப்படைகள் அமைக்து தேடி வந்தனர்

8 கைதிகள் பிடிப்பட்டனர்

காலை வரை அடுத்தடுத்து 5 கைதிகள் பிடிபட்ட நிலையில், தற்போது ட்ரோன் கேமராக்கள் மூலம் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில் பொட்டல் காட்டில் பதுங்கியிருந்த மேலும் 8 கைதிகள் பிடிபட்டுள்ளனர்.

தீவிர தேடுதல்

தப்பியோடிய 17 பேரில் 13 பேர் பிடிபட்டுள்ள நிலையில், மீதமுள்ள 4 கைதிகளைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com