சேலம் மத்திய சிறையில் ஆசிட் வீசப்பட்ட கைதி அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழப்பு

சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சின்ராஜ் சிகிச்சை பலனின்றி இன்று இறந்துவிட்டார்.
சேலம் மத்திய சிறையில் ஆசிட் வீசப்பட்ட கைதி அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழப்பு
Published on: 

தர்மபுரி மாவட்டம் கொக்காரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ் (71). இவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் அரூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இவர் கடந்த மாதம் 29-ந்தேதி ஜெயிலில் உள்ள தனது அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கொலை வழக்கு கைதியான கிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரிப்பட்டியை சேர்ந்த திருப்பதி (44) என்பவருக்கும் அவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.

தகராறு

தகராறு முற்றி ஆத்திரம் அடைந்த திருப்பதி, கழிவறை கழுவ பயன்படுத்தப்படும் ஆசிட் கலந்த லைசாலை எடுத்து அவரது மீது ஊற்றினார்.

இதில் காயமடைந்த அவர் சிறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் உடல்நிலை மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக கடந்த 11-ந் தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மேலும் அவருக்கு சிறுநீரக பிரச்சனையும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சின்ராஜ் சிகிச்சை பலனின்றி இன்று இறந்துவிட்டார். இதையடுத்து அங்கு திரண்ட அவரது உறவினர்கள் இந்த இந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போதுதான் உடலை வாங்குவோம் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com