புழலில் சிறை பஜார் மீண்டும் திறப்பு - கைதிகளுக்கு டோக்கன் மூலம் பொருட்கள் வழங்க ஏற்பாடு

பாதுகாப்பு காரணங்களுக்காக சிறைக்கு வெளியே கைதிகள் மூலம் நடத்தி வந்த சிறை பஜார்கள், பெட்ரோல் பங்க்குள் மூடப்பட்டன.
புழல் சிறை
Published on: 
Summary

புழல் சிறை கைதிகளுக்கு, ‘ப்ரீடம் பஜாரில்’ கிடைக்கும் பொருட்களை இனி சிறைக்குள்ளேயே வழங்கும் வகையில், ‘டோக்கன்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

புழல் சிறை

புழல் ஜெயிலில் இருந்து 2 கைதிகள் மற்றும் தேனி சிறையில் இருந்த 17 கைதிகள் அடுத்தடுத்து தப்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக சிறைக்கு வெளியே கைதிகள் மூலம் நடத்தி வந்த சிறை பஜார்கள், பெட்ரோல் பங்க்குள் மூடப்பட்டன.

புழல் ஜி.என்.டி., சாலையில் கைதிகளை மூலம் நடத்தப்பட்ட உணவகம், இறைச்சியகம், பெட்ரோல் பங்க் ஆகியவையும் மூடப்பட்டது.

ப்ரீடம் பஜார்

இதற்கிடையே மேலும் புழல் சிறை கைதிகளுக்கு, ‘ப்ரீடம் பஜாரில்’ கிடைக்கும் பொருட்களை இனி சிறைக்குள்ளேயே வழங்கும் வகையில், ‘டோக்கன்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

புழல் சிறை - 1 அருகே செயல்பட்டு வரும் ப்ரீடம் பஜார் கடை மட்டும், நேற்று திறக்கப்பட்டது.

தீபாவளி

இனிப்பு, பிஸ்கட், காரம், பிரட், ஊறுகாய், சட்டை உள்ளிட்ட பொருட்களை உறவினர்கள் வாங்கி, கைதிகளிடம் நேரடியாக வழங்குவதற்கு பதிலாக, டோக்கன் முறையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதனை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட கைதிகள், சிறைக்குள்ளேயே பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

தீபாவளியை முன்னிட்டு, கைதிகளுக்கு வழங்குவதற்காக கால் கிலோ இனிப்பு 125 ரூபாய்க்கு சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

X