தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம்- தனித்தீர்மானத்திற்கு தி.மு.க. ஆதரவு

தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றியவர் பெயரிலான பல்கலையில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது வேதனை.
தி.மு.க., எம்.எல்.ஏ கோவி. செழியன்
தி.மு.க., எம்.எல்.ஏ கோவி. செழியன்
Published on

சட்டசபையில் முதலமைச்சர் கொண்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கிறது என்றார்.

தமிழக சட்டசபை கூட்டம் விடுமுறைக்கு பின் இன்று கூடியது. அப்போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றம் அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். தனித்தீர்மானத்தை கொண்டு வந்த போது முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-

இந்தியாவின் நெற்றியில் இருக்கும் பொட்டு தான் தமிழ் மொழி; தமிழும் தமிழனும் இல்லாத நாடு ஏது?. தமிழ் ஒரு சிந்தனை, தமிழ் அன்பு... தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் பவர். ஒரு பெயரே ஒரு சொல்லே வரலாறு என்றால் அது தமிழ்தான். தமிழ் நமது நாகரிகம், பண்பாடு ஒட்டு மொத்த உயிர் மூச்சு.

தமிழ்த்தாய் வாழ்த்தின் பெருமையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேசினார்.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்தது. இதுதொடர்பாக தி.மு.க., எம்.எல்.ஏ கோவி. செழியன் பேசுகையில்,

சட்டசபையில் முதலமைச்சர் கொண்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கிறது. தமிழ்தாய் வாழ்த்திற்கு 3-ம் இடம் என்று சொல்லும் போது அவமானமாக இருக்கிறது. தமிழ் மொழியை தேசிய மொழியாக்கி செம்மொழியாக்கியவர் கலைஞர் கருணாநிதி. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அரசு அலுவலகங்களில் பாட அரசாணை வெளியிட்டவர் கலைஞர். தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றியவர் பெயரிலான பல்கலையில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது வேதனை. தமிழ்த்தாய் விவகாரத்தில சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com