தவெக அரசில் பிரவீன் சக்ரவர்த்தியின் ஆதிக்கம்?.. ரகுபதி கேள்விக்கு அமைச்சர் விஸ்வநாதன் பதில்

அவையில் இல்லாத நபரை பற்றி கருத்துக்களை சொல்வதை ஏற்புடையதல்ல
பட்ஜெட் மீதான விவாதம்
பட்ஜெட் மீதான விவாதம்
Published on

தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று முன் தினம் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தொடர்ந்து நேற்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இதன்போது பேசிய முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான ரகுபதி பேசுகையில், "காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி தமிழ்நாட்டு அரசின் கொள்கைகளை வடிவமைப்பதிலும், ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்குவதாக ஒரு ஆங்கில செய்திநாளிதழில் வந்துள்ளது அது உண்மையா என கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் விஸ்வநாதன் பதில்

இதற்கு பதிலளித்த தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரசை சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதன்,

பிரவீன் சக்கரவர்த்தி ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த அவையில் அங்கத்தினர் அல்லாதவரை பற்றி பேசுவது என்பது வழக்கத்திற்கு மீறிய செயலாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி அவர்கள் தமிழக அரசின் சார்பாகவோ, அங்கீகாரம் பெற்ற குழுக்களின் சார்பாகவோ எந்த அமைப்பிலும் அங்கத்தினராக இல்லாதவர்.

ஊடகங்கள் சமீப காலங்களில் ஒரு செய்தியை பல்வேறு செய்தியாக எழுதிக் கொண்டிருக்கிறது. பத்திரிகையில் வரும் செய்தியை வைத்துக் கொண்டு திமுக முன்னாள் அமைச்சர் சம்பந்தமில்லாத அவையில் இல்லாத நபரை பற்றி கருத்துக்களை சொல்வதை ஏற்புடையதல்ல" என தெரிவித்தார்.

தவெக – காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரமிட்ட பிரவீன் சக்கரவர்த்தி தவெக சார்பில் மாநிலங்கவளை எம்.பியாக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com