பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம்- வீடியோ வெளியிட்டு பட நிறுவனம் அறிவிப்பு

பிரதீப் இயக்கி நடித்த 'லவ் டுடே' படம் ஹிட்டானது. இதையடுத்து பிரதீப் ரங்கநாதன் மார்க்கெட் அதிகரித்ததுஇயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்ஐசி' படத்தில் பிரதீப்ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வருகிறார்
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம்- வீடியோ வெளியிட்டு பட நிறுவனம் அறிவிப்பு
Published on

2019 - ம் ஆண்டில் வெளியான 'கோமாளி' படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தில் ஜெயம் ரவி, காஜல்அகர்வால் ஆகியோர் இதில் நடித்தனர்.

இந்தப்படத்தை தொடர்ந்து பிரதீப் 'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்தார். இந்த படம் ஹிட்டானது.

இதையடுத்து பிரதீப் ரங்கநாதன் மார்க்கெட் அதிகரித்தது. அதை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்ஐசி' படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் கீர்த்திஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை லலித் தயாரிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்த படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் தயாரிப்பில் அடுத்த படத்தில் நடிக்க பிரதீப் 'கமிட்' ஆகியுள்ளார்.

அந்த படத்தை தற்போது 'ஓ மை கடவுளே' இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். இந்த புதிய படத்தின் தலைப்பு விரைவில் வெளியாக உள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவுள்ளது.

இந்த திரைப்படம் சம்பந்தமான அறிமுக விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ லவ் டுடே பட பாணியில் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவனாக அந்த அறிமுக வீடியோவில் பிரதீப் ரங்கநாதன் அவரது கல்லூரி காலங்களை பற்றி பேசுகிறார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com