19-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

இம்மாத இறுதிக்குள் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு.
வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை
Published on: 

இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம், இந்த மாதம் இறுதிக்குள் இரண்டு காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது. ஒன்று அரபிக் கடலிலும், மற்றொன்று வங்கக்கடலிலும் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.

19-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்த நிலையில் இன்று தென்மேற்கு அரபிக் கடலில் நாளை மறுதினம் (அக்டோபர் 19-ந்தேதி) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

தற்போது வளிமண்டல சுழற்சி ஏற்பட்டிருப்பதாகவும், அதன் காரணமாக 19-ந்தேதி அரபிக் கடல் தென்மேற்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

இதற்காரணமாக தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், அதையொட்டிள்ள பகுதிகளில் பரவாலாக பருமமழை தீவிரம் அடைய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com