

புதிதாக நடப்பட்டுள்ள மின்கம்பங்களில் மின்கம்பிகள் பொருத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னேரி அடுத்த மடிமைகண்டிகை கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். குறைந்த மின்அழுத்த மின்வினியோகத்தால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மின்வாரியத்தால் மின் கம்பங்கள் நடப்பட்டது. ஆனால் இதுவரை புதிய மின் கம்பங்களில் மின்கம்பிகள் பொருத்தப்படவில்லை. டிரான்ஸ்பார்மரும் அமைக்கவில்லை. இதனால் மடிமைகண்டிகை கிராமத்தில் கான்கிரீட் மின்கம்பங்கள் வெறும் காட்சி பொருளாக உள்ளன.
அடிக்கடி ஏற்படும் மின்தடை மற்றும் குறைந்த அழுத்த மின்சார வினியோகத்தை தடுக்க உடனடியாக திட்டமிட்டபடி டிரான்ஸ்பார்மர் அமைக்க புதிதாக நடப்பட்டுள்ள மின்கம்பங்களில் மின்கம்பிகள் பொருத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.