

மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ரூ.21-ல் காவலர் வீர வணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், காவலர் வீரவணக்க நாள் நிகழ்வில், உயிர்நீத்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் விஜய் டிஜிபி அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
அங்கு இந்நிகழ்வில், உயிர்நீத்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அங்கு மரக்கன்றும் நட்டார்.
பின்னர், முதலமைச்சர் விஜய் டிஜிபி அலுவலகத்தில் உள்ள டிஜிபியின் அறையை பார்வையிட்டார்.
இதற்காக அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, தமிழக காவல்துறையின் தலைமை அலுவலகமான டிஜிபி அலுவலகத்திற்கு அவர் வருகை தருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.