மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை- போலீசார் விசாரணை

அருள்தாஸுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
தற்கொலை
தற்கொலை
Published on: 

களியக்காவிளை அருகே படந்தாலுமூடு புளியவிளை பகுதியைச் சேர்ந்தவர் அருள்தாஸ். இவர் மார்த்தாண்டம் பகுதியில் செயல்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

தகராறு

அருள்தாஸுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அருள்தாஸ் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கோபமடைந்த அவரது மனைவி, குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் அருள்தாஸ் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை அவரது மனைவி வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் அறையில் அருள்தாஸ் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர்.

போலீசார் விசாரணை

அவர்கள் இதுகுறித்து களியக்காவிளை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அருள்தாஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருள்தாஸ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவி கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில், ஹோட்டல் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புளியவிளை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com