மாடுகளை சாலையில் சுற்றவிட்டால் உரிமையாளர்கள் மீது போலீசில் புகார்

ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 13 மாடுகளை பிடித்தனர்.
மாடுகளை சாலையில் சுற்றவிட்டால் உரிமையாளர்கள் மீது போலீசில் புகார்
Published on: 
Summary

ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 13 மாடுகளை பிடித்தனர். இதில் 7 மாடுகளின் உரிமையாளர்களுக்கு உடனடியாக ரூ.2ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.14 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றி வந்தன. இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் மாநகராட்சிக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையரின் உத்தரவின்படி மாநகர நகர் நல அலுவலர் பூபேஷ் மேற்பார்வையில் மண்டல சுகாதார அலுவலர் லட்சுமி கணேசன் தலைமையில் ஆய்வாளர்கள் செந்தில்குமார் அஸ்தர் அலி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 13 மாடுகளை பிடித்தனர். இதில் 7 மாடுகளின் உரிமையாளர்களுக்கு உடனடியாக ரூ.2ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.14 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. மீதமுள்ள 6 மாடுகளை வாகனங்களில் ஏற்றி செங்கல்பட்டு அருகே உள்ள பராமரிப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாடுகளை முறையாக கட்டி பராமரிக்காமல் சாலையில் விடும் உரிமையாளர்கள் மீது மாநகராட்சி சார்பில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com