புழல் சிறையில் இருந்து தப்பியோடிய கைதியை மடக்கிப்பிடித்த போலீசார்

3 தனிப்படைகளை அமைத்து தப்பி ஓடிய 2 கைதிகளை தேடி வந்தனர்.
Puzhal Jail - Prisoner Arrested
Published on: 
Summary

புழல் சிறையில் இருந்து தப்பியோடி அண்ணா நகர் பகுதியில் பதுங்கியிருந்த நேபாள கைதி சுதீப்பை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

புழல் சிறை

புழல் சிறையில் விசாரணை கைதிகள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தண்டனை கைதிகள் 1000-க்கும் மேற்பட்டோர், பெண்கள் சிறையில் 150-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். 3 அடுக்கு சிறையில் ராட்சத மதில் சுவர் அமைத்து மின்வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை சிறையில் நேபாளம் நாட்டை சேர்ந்த சுதீப் (வயது 23) அடைக்கப்பட்டிருந்தார்.

அவர் சென்னை பாடியில் தங்கி கொண்டு திருட்டில் ஈடுபட்டபோது கடந்த மாதம் ஜெ.ஜெ. நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.

நேற்று முன்தினம் மாலை அவர் உணவு சாப்பிடுவதற்கு வரவில்லை. அவரை அறையில் தேடி பார்த்த போதும் காணவில்லை. இதை பார்த்து சிறை போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தேடி பார்த்தும் சுதீப் கிடைக்காததால் புழல் போலீசில் சுதீப் காணாமல் போனது குறித்து புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் வசந்த ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.

மேலும் ஒருவர் தப்பி ஓட்டம்

சென்னை திருமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் (26) என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று மதியம் உணவு இடைவேளையின்போது இவர் உணவு சாப்பிட வரவில்லை அறையில் தேடி பார்த்தும் அவர் அங்கு இல்லை. சிறை முழுவதும் தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இது குறித்தும் புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 தனிப்படைகளை அமைத்து தப்பி ஓடிய 2 கைதிகளை தேடி வந்தனர்.

நேபாள கைதி கைது

இந்நிலையில் அண்ணா நகர் பகுதியில் பதுங்கியிருந்தபோது கைதி சுதீப்பை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். 20-ந்தேதி காலையில் தப்பியோடிய நேபாள கைதியை 2 நாட்களில் போலீசார் மடக்கிப் பிடித்தனர். புழல் சிறையில் இருந்து தப்பியோடி தலைமறைவாக உள்ள மற்றொரு கைதியை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com