

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடக்கும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 300-க்கும் மேற்பட்ட பெண்கள் மனு கொடுத்து வருகின்றனர்
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகையாக மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று த.வெ.க. அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்த நிலையில், ஏழை எளிய மக்கள் உரிமைத் தொகை எப்போது கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடக்கும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 300-க்கும் மேற்பட்ட பெண்கள் மனு கொடுத்து வருகின்றனர். வரிசையில் காத்திருக்க விடாமல் தனியாக ஆள் போட்டு மனுக்களை சமூக பாதுகாப்பு திட்ட பிரிவினர் வாங்கி வருகின்றனர்.
புதிய அரசு பொறுப்பேற்று 4 மாதங்களை கடந்த நிலையில் குறைதீர் முகாம்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனு கொடுத்துள்ளனர். தாலுகா அளவிலான முகாம்கள், ஜமாபந்தி மற்றும் முதல்வரின் தனிப்பிரிவிற்கும் பல ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன.
இது குறித்து குறைதீர் முகாமிற்கு வந்த பெண்கள் கூறுகையில், நாங்கள் தரும் விண்ணப்பங்களுக்கு வாங்கும் ரசீது ஒரு மாதத்தில் காலாவதியாகி விடுகிறது. மீண்டும் விண்ணப்பிக்கும் நிலை ஏற்படுகிறது. அரசு தரப்பில் இருந்து தெளிவான பதில் வந்தால் நன்றாக இருக்கும் என்றனர்.