மேகதாது விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு - அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

அவையின் அனுமதியின்றி தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை ஏற்றது எப்படி?
Speaker prabhakar - ADMK MLAs
Published on

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 3-வது நாள் நிகழ்வுகள் தொடங்கியது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் ஆலையில் இருந்து அமோனியா வாயு வெளியேறி வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் பலியாகினர்.

இதுதொடர்பாக 110 விதியின் கீழ் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் விளக்கம் அளித்தார்.

அப்போது அமைச்சர் விளக்கத்திற்கு முன்பாக தங்களை பேச அனுமதிக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், நேரம் தரும்போது உங்கள் பிரச்சனை, அமைச்சரின் விளக்கத்திற்கு பதில் பேசுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கிடையே, அதிமுக கொறடா கடிதம் அளித்துள்ள நிலையில் எங்களை பேச அனுமதிக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

மேகதாது விவகாரத்தில் உரிமை மீறல் குறித்து பேச எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். அப்போது அவர் கூறுகையில்,

மேகதாது விவகாரத்தில் முதல்வரின் தனித்தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கை ஏற்கப்பட்டது. அவையின் அனுமதியின்றி தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை ஏற்றது எப்படி?

அவை உரிமையை மீறி நடந்துகொண்டதாக கூறி உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்து இபிஎஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

உரிமைமீறல் பிரச்சனை குறித்து மனு அளித்தனர். அவை முடிவதற்குள் வாய்ப்பு தருகிறேன் என சபாநாயகர் கூறினார்.

இதையடுத்து, பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com