யாரையும் தனிப்பட்ட விதத்தில் தாக்கி பேசக்கூடாது - உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அறிவுரை

கண்ணிய குறைவாக நடந்து கொள்ளும் செயலில் ஈடுபட்டால் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
Speaker JCD Prabhakar
Published on

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 3-வது நாள் நிகழ்வுகள் தொடங்கியது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் ஆலையில் இருந்து அமோனியா வாயு வெளியேறி வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் பலியாகினர்.

இதுதொடர்பாக 110 விதியின் கீழ் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் விளக்கம் அளித்தார்.

அப்போது அமைச்சர் விளக்கத்திற்கு முன்பாக தங்களை பேச அனுமதிக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், நேரம் தரும்போது உங்கள் பிரச்சனை, அமைச்சரின் விளக்கத்திற்கு பதில் பேசுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கிடையே, அதிமுக கொறடா கடிதம் அளித்துள்ள நிலையில் எங்களை பேச அனுமதிக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

110 விதியின் கீழ் அமைச்சர் பேசிய பின்னர் வேறு யாரும் பேசுவதற்கு அனுமதி கிடையாது என சபாநாயகர் திட்டவட்டமாக கூறினார். சட்டசபை உறுப்பினர்களுக்கான குறிப்புகளை வழங்கி சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து சபாநாயகர் கூறியதாவது:

* நீதிமன்ற வழக்குகளை அவையில் பேசக்கூடாது. யாரையும் தனிப்பட்ட விதத்தில் தாக்கி பேசக்கூடாது.

* பேசவதற்கு அனுமதி கோரியபோது எடப்பாடி பழனிசாமி, எ.வ.வேலு ஆகியோரின் மைக் அணைக்கப்பட்டது.

* பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படுவதால் உறுப்பினர்கள் அடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

* அவையில் கண்ணியத்துடன் பேச வேண்டும்.

* பேரவை நேரலையின்போது உறுப்பினர்கள் முகபாவனை, கேலி செய்யும் பேச்சு வலைதளத்தில் பரவி உள்ளதை சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுத்தார்.

* கண்ணிய குறைவாக நடந்து கொள்ளும் செயலில் ஈடுபட்டால் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

* சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசக்கூடாது, விவாதத்தின்போது பேசும் உறுப்பினர்கள் short and sweet ஆக பேச வேண்டும் என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com