

மின்வினியோகம் சீராகததால் குடிநீர் மோட்டார், மிக்சி உள்ளிட்ட மின்சாதன பொருட்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கருணாநிதி நகர், துர்கா தேவி நகர், சாஸ்திரி நகர், நேதாஜி நகர், ஆகிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் திடீரென மின்தடை ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவல கத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்த போது சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மின் தடையால் விடிய, விடிய பொதுமக்கள் தவித்தனர். இரவில் தூக்கமின்றியும், கொசுக்கடியாலும் குழந்தைகள், முதியோர் கடும் சிரமம் அடைந்தனர். இன்று காலை வரை மின்வினியோகம் சீராகததால் குடிநீர் மோட்டார், மிக்சி உள்ளிட்ட மின்சாதன பொருட்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் தவிக்கும் நிலை உருவானது. வைத்தியநாதன் மேம்பாலம் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் தீப்பற்றி கேபிள் வயர்கள் எரிந்ததால் இந்த மின்தடை ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. இதனை சரிசெய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டனர். இன்று மதியம் 1 மணி வரை மின்வினியோகம் சீராகததால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.