தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்... ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னையில் தங்கி வேலை செய்பவர்கள், ஐ.டி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்தனர்.
போக்குவரத்து நெரிசல்
Published on: 
Summary

ஆயுத பூஜை, விஜய தசமி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அளிக்கப்பட்ட தொடர் விடுமுறை முடிந்து, பொதுமக்கள் மற்றும் பணிக்கு திரும்புவோர் மீண்டும் சென்னைக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக சென்னையின் முக்கிய நுழைவுவாயிலான ஜி.எஸ்.டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல்

சென்னையில் தங்கி வேலை செய்பவர்கள், ஐ.டி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்தனர். இந்நிலையில், விடுமுறை முடிந்து இன்று முதல் வழக்கமான அலுவலக வேலை நாள்கள் தொடங்குவதால் லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் சென்னைக்குத் திரும்புகின்றனர்.

பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் ஆம்னி பேருந்துகள் மட்டுமின்றி, ஏராளமானோர் சொந்தக் கார்களிலும் குடும்பத்துடன் சென்னை நோக்கி வருவதால் ஜி.எஸ்.டி சாலையில் கடும் வாகன நெரிசல் காணப்படுகிறது. குறிப்பாக வண்டலூர், பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் பல கிலோமீட்டர்கள் ஊர்ந்து சென்றன.

சொந்த ஊர்களில் இருந்து திரும்பும் வாகனங்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததால், போக்குவரத்து காவல்துறையினர் நெரிசலைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், வாகனங்களின் அதிகப்படியான வருகையால் பயணிகள் சென்னைக்குள் நுழைவதில் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com