விழுப்புரத்தில் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கிய வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள்

விழுப்புரம் நகர போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
மாடியில் வாலிபர் பதுங்கியிருந்த தகவல் அறிந்து அந்த பகுதியில் திரண்ட மக்கள்
மாடியில் வாலிபர் பதுங்கியிருந்த தகவல் அறிந்து அந்த பகுதியில் திரண்ட மக்கள்
Published on: 

விழுப்புரம் நகர மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் கொலைகள் நடந்து வரும் நிலையில், அரைக்கால் டவுசர் அணிந்த நிலையில் வீட்டின் மொட்டை மாடியில் வாலிபர் பதுங்கியிருந்ததால் அவர் டவுசர் கொள்ளையனா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

விழுப்புரம் லட்சுமி நகரில் வசித்து வருபவர் சரோஜா. இவர் இன்று காலை, மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக மோட்டார் போட்டார்.

தண்ணீர் தொட்டி

சிறிது நேரம் கழித்து தனது 8 வயது மகனை அழைத்து, மாடியில் உள்ள தண்ணீர் தொட்டி நிரம்பி விட்டதா? பார்த்து வா என கூறி அனுப்பினார்.

சிறுவனும், மாடிக்கு ஏறி சென்று தண்ணீர் தொட்டியை பார்த்து விட்டு திரும்பினார். அப்போது பக்கத்து வீட்டின் மாடியில் ஒரமாக வாலிபர் ஒருவர் படுத்திருந்தார். அந்த நபர் அரைக்கால் டவுசர் போட்ட நிலையில் இருந்ததால் அதிர்ச்சியான அந்த சிறுவன் உடனே நீ யார்? இங்கு என்ன செய்கிறாய்? என கேட்டதாகவும், அதற்கு அந்த நபர் பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்த கல்லை எடுத்து அடித்ததாகவும் கூறப்படுகிறது. உடனே சிறுவன் கீழே ஓடி வந்து தனது தாயிடம் தெரிவித்தார்.

வாலிபர்

உடனே அவரும் மேலே சென்று பார்த்து அந்த வாலிபர் நீ யார்? என கேட்டுள்ளார். ஆனால் அவன் பதில் சொல்லாமல் முறைத்து பார்த்துள்ளார். இதனால் அந்த பெண் கீழே வந்து திருடன். திருடன்.. என கத்தினார்.

அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் அந்த பகுதி இளைஞர்கள் அனைவரும் ஓடி வந்தனர். பின்னர் மாடியில் இருந்த அந்த வாலிபர் ஓடி விடாதவாறு அனைவரும் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து விழுப்புரம் நகர போலீசில் ஒப்படைத்தனர்.

விழுப்புரம் நகர போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் சங்கரன்கோவிலை சேர்ந்த சுப்பு என்பது தெரியவந்தது.

கொள்ளையடிக்க வந்தாரா?

அவர் எதற்காக அந்த வீட்டின் மாடி மீது ஏறினார். கொள்ளையடிக்கும் நோக்கில் வீட்டின் மொட்டை மாடியில் படுத்திருந்தரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் நகர மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் கொலைகள் நடந்து வரும் நிலையில், அரைக்கால் டவுசர் அணிந்த நிலையில் வீட்டின் மொட்டை மாடியில் வாலிபர் பதுங்கியிருந்ததால் அவர் டவுசர் கொள்ளையனா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X