

பட்டுக்கோட்டையை அடுத்த அணைக்காடு நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயசித்ரா. அவருடைய மகள் திவ்யதர்ஷினி (வயது 23). இவர் கல்லூரியில் படிக்கும் போது சபரிநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் திவ்ய தர்ஷினிக்கும் சபரிநாதனுக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கணவரை பிரிந்த திவ்யதர்ஷினிக்கும் பட்டுக்கோட்டை வளவன்புரம் மன்னை நகரை சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து இருவரும் பட்டுக்கோட்டை நகரில் உள்ள ஆர்வி.நகர் பகுதியில் உள்ள வீட்டின் மாடியில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கும் திவ்யதர்ஷினிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு சண்டை நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திவ்ய தர்ஷினி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவருடைய தாய் ஜெயசித்ரா பட்டுக்கோட்டை நகர போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.