பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார்

2000-ம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதினை சாலமன் பாப்பையா பெற்றுள்ளார்.
Solomon Pappaiah
Published on
Summary

பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.

சாலமன் பாப்பையா

பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.

தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு சாலமன் பாப்பையா உரை எழுதி இருக்கிறார்.

கலைமாமணி விருது

2000-ம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதினையும் அவர் பெற்றுள்ளார். பட்டிமன்றத்திற்காக முதல்முறையாக பத்மஸ்ரீ விருதை பெற்றவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா.

மத்திய அரசின் 4-வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை 2021-ம் ஆண்டு பெற்றார் சாலமன் பாப்பையா.

பட்டிமன்றம்

அறிஞர்கள் இடையே இருந்த பட்டிமன்றத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் சாலமன் பாப்பையா.

பாரதியின் கவிதை தொடங்கி கம்பனின் காவியம் வரை பாமரத் தமிழனனுக்கு பக்குவமாய் அறிமுகம் செய்தவர்.

தனது எளிமையான நகைச்சுவையான அறிவார்ந்த பேச்சால் பட்டிமன்றத்தை உலக அளவில் கொண்டு சேர்த்தவர்.

நகைச்சுவை கதாப்பாத்திரம்

பலரும் திரைத்துறையை நோக்கிச் செல்லும் நிலையில் திரைத்துறையினரை பட்டிமன்றம் நோக்கி வரவைத்தவர் பாப்பையா. பட்டிமன்ற நடுவராக மட்டுமல்லாமல் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் சாலமன் பாப்பையா. சிவாஜி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் சாலமன் பாப்பையா நடித்துள்ளார்.

மதுரையில் காலமான சாலமன் பாப்பையாவுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com