

கொளத்தூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு (75), நீண்ட நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும், வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலையும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அன்புமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்.,
“தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சென்னை கொளத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
70 நாள்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை தேறி வருவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ்.பாபுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், கொளத்தூர் தொகுதி மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில்,
“கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு அவர்கள் செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தவெக கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வி.எஸ். பாபுவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!” எனக் கூறியுள்ளார்.