இசையமைப்பாளர் தேவா மறைவு - துணை குடியரசுத் தலைவர் இரங்கல்

காலத்தால் அழியாத பல பாடல்களைத் தந்த அவரது இசைப் பங்களிப்பும், தனித்துவமான கானா பாடல்களும் என்றும் நினைவுகூரப்படும்.
இசையமைப்பாளர் தேவா மறைவு - துணை குடியரசுத் தலைவர் இரங்கல்
Published on: 

பிரபல தமிழ் திரைப்படை இசையமைப்பாளர் மற்றும் பாடகர் தேனிசைத் தென்றல் தேவா திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று உயிரிழந்தார்.இவரின் மறைவுக்கு தமிழ் திரையுலகினர், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தும், நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மறைந்த தேனிசைத் தென்றல் தேவாவிற்கு குடியரசுத்துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

இசையமைப்பாளர் தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.எளிய மக்களின் உணர்வுகளையும் வாழ்வியலையும் தனது இசையிலும் கானா பாடல்களிலும் அழகாக வெளிப்படுத்தி, தனித்துவமான இசைப்பாணியால் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவர் தேவா அவர்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததுடன், பாடலாசிரியராகவும் பாடகராகவும் தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தியவர்.

படைப்பு என்றுமே நினைவுகூரப்படும்

காலத்தால் அழியாத பல பாடல்களைத் தந்த அவரது இசைப் பங்களிப்பும், தனித்துவமான கானா பாடல்களும் என்றும் நினைவுகூரப்படும். அவரது மறைவு தமிழ் இசையுலகிற்குப் பேரிழப்பாகும்.

அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com