

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேசுவதற்கு திமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் தவெக அரசால் கைவிடப்படுகிறது என சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
பரந்தூர் ஏர்போர்ட்டுக்கு ஏற்கெனவே நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம், இப்போது கைவிட்டால் எப்படி? என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கேள்வி எழுப்பினார்.
பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் ரத்து குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் திமுகவினர் அனைவரும் எழுந்துநின்று கோஷம் எழுப்பினர்.
பரந்தூர் ஏர்போர்ட் விவகாரம் தொடர்பாக பேரவையில் எழுந்துநின்று முழக்கமிட்டு எழுப்பிய திமுகவினரை சபாநாயகர் கண்டித்தனர்.
எதிர்ப்பு குரல் கொடுப்பதாக இருந்தால் வெளியே சென்று குரல் கொடுங்கல் என சபாநாயகர் கூறியதை அடுத்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-
பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் குறித்து விவாதிக்க ஏற்கனவே 55 விதியின் கீழ் திமுக தீர்மானம் கொண்டு வந்தது.
பரந்தூர் ஏர்போர்ட் கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று ஏற்கப்படும் என ஏற்கெனவே கூறியிருந்தனர்.
முதல்வர் 110 விதியின் கீழ் அறிவித்ததால் கவனஈர்ப்பு தீர்மானத்தில் விவாதிக்க மறுத்துவிட்டனர்.
பரந்தூர் ஏர்போர்ட்டு மறுக்கப்பட்டால் எத்தகைய பொருளாதார விளைவு ஏற்படும் என விளக்கமறிக்க வாய்ப்பு தரவில்லை.
பல நாட்களாக கவனஈர்ப்பு தீர்மானத்தில் எடுக்காது இன்று 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.
பரந்தூர் ஏர்போர்ட்டை நம்பித்தான் எலக்ட்ரானிக் நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் வந்தன.
ஸ்ரீபெரும்புதூரில் அதிகளவில் தொழிற்சாலைகள் உற்றதால் பரந்தூரில் விமான நிலையம் அமைவது அவசியம்.
பல இடங்களில் ஆய்வு செய்த பின்னர் தான் பரந்தூரை விமான நிலையத்திற்காக தேர்வு செய்தோம்.
பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்தால் பொருளாதாரத்தை பாதிக்கும், அரசியல் நோக்கம் தாண்டி செயல்படுவது அவசியம்.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பது அவசியம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.