விஐடி பல்கலைக்கழகத்தில் 2027-ஆம் கல்வியாண்டு பி.டெக். மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்!

VITEEE நுழைவுத் தேர்வு 2027-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி தொடங்கி மே 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
விஐடி பல்கலைக்கழகத்தில் 2027-ஆம் கல்வியாண்டு பி.டெக். மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்!
Published on: 

விஐடி பல்கலைக்கழகத்தின் வேலூர், சென்னை, அமராவதி மற்றும் போபால் வளாகங்களில் 2027-ஆம் கல்வியாண்டிற்கான பி.டெக். பொறியியல் பட்டப்படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு (VITEEE) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (அக்டோபர் 20) தொடங்கியுள்ளது.

இதுகுறித்து விஐடி பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ. விசுவநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

விஐடி பல்கலைக்கழகத்தின் நான்கு வளாகங்களிலும் பி.டெக். பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், https://viteee.vit.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

VITEEE நுழைவுத் தேர்வு 2027-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி தொடங்கி மே 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் 133 நகரங்களிலும், வெளிநாடுகளில் 9 தேர்வு மையங்களிலும் இத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

மாணவர்கள் தங்களது வசதிக்கேற்ப, தாங்கள் கல்வி பயின்ற இடம் அல்லது சொந்த ஊருக்கு அருகிலுள்ள தேர்வு மையங்களைத் தேர்ந்தெடுத்து நுழைவுத் தேர்வை எழுதலாம்.

எனவே, விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக். பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப விவரங்களை அறிந்து, ஆன்லைன் விண்ணப்பப் பதிவை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்ப இணையதளம்: https://viteee.vit.ac.in

நுழைவுத் தேர்வு தேதிகள்: ஏப்ரல் 28 – மே 2, 2027

X

Maalai Malar
www.maalaimalar.com