

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சிறப்பு “பெருமாள் கோவில்கள் சுற்றுலா – ஒரு நாள் சுற்றுலா” திட்டம் நாளை முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தையொட்டி, பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமாள் கோவில்களை ஒரே நாளில் தரிசித்து பயன்பெறும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சிறப்பு “பெருமாள் கோவில்கள் சுற்றுலா – ஒரு நாள் சுற்றுலா” திட்டம் நாளை முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலை தலைமை அலுவலகத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், சிங்கபெருமாள் கோவில், பாடலாத்ரி நரசிம்மர் கோவில் மற்றும் திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில் உள்ளிட்ட 6 பெருமாள் கோவில்களில் தரிசனம் செய்யும் வகையில் இச்சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் ஒருவருக்கு ரூ.1,000 ஆகும்.
காலை 8.30 மணிக்கு புறப்பட்டு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில், திருமழிசை ஜெகநாத பெருமாள் கோவில், திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் மற்றும் பூந்தமல்லி வரதராஜபெருமாள் கோவில் உள்ளிட்ட 7 பெருமாள் கோவில்களில் தரிசனம் செய்யும் வகையில் இச்சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் ஒருவருக்கு ரூ.1,000 ஆகும். இதே போல் மதுரை, திருச்சி, தஞ்சாவூரில் உள்ள வைணவ கோவில்களுக்கும் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட சுற்றுலாக்களுக்கு www.ttdconline.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு சுற்றுலா கழகம் தெரிவித்து உள்ளது.