ஆம்னி பஸ் மோதியதில் காலி மதுபாட்டில் லாரி சாலையில் கவிழ்ந்தது

விபத்தில் பஸ் டிரைவர் கிளீனியர் மற்றும் லாரி டிரைவருக்கு காயம் ஏற்பட்டது.
ஆம்னி பஸ் மோதியதில் காலி மதுபாட்டில் லாரி சாலையில் கவிழ்ந்தது
Published on: 
Summary

சாலையில் சிதறிய பாட்டில் துண்டுகளை கூடுதல் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு அப்புறப்படுத்தினர். இதனால் சென்னை- பெங்களூரு தேசிய ெநருஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு 20 பயணிகளுடன் ஆம்னி பஸ் புறப்பட்டு வந்தது. இன்று அதிகாலை 2 மணி அளவில் வேலூர் அலமேலு மங்காபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பஸ் வந்தது.

லாரி கவிழ்ந்தது

அப்போது வாணியம்பாடியில் இருந்து காலி மது பாட்டில்களை ஏற்றிக்கொண்டு மதுராந்தகத்திற்கு லாரி ஒன்று சென்றது. அதிவேகமாக சென்ற ஆம்னி பஸ் முன்னாள் சென்ற லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு எதிர் திசை எதிர் திசையில் பாய்ந்து நின்றது. அப்போது அதிர்ஷ்டவசமாக எந்த வாகனங்களும் வராததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

பஸ் மோதியதில் லாரி சாலையில் கவிழ்ந்தது. லாரியில் இருந்த காலி மது பாட்டில்கள் உடைந்து சாலை முழுவதும் சிதறியது. இதனால் 2 பக்கமும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.

போக்குவரத்து பாதிப்பு

விபத்து குறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் மற்றும் பள்ளி கொண்டா தேசிய நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சாலையில் கவிழ்ந்து நின்ற லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் பஸ் டிரைவர் கிளீனியர் மற்றும் லாரி டிரைவருக்கு காயம் ஏற்பட்டது. பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. போலீசார் மற்றொரு பஸ்சை ஏற்பாடு செய்து பயணிகளை சென்னைக்கு ஏற்றி அனுப்பி வைத்தனர்.

ஆம்னி பஸ்

ஆம்னி பஸ் டிரைவர் பூட்டுதாக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் லாரி டிரைவர் மற்றும் பஸ் கிளீனர் ஆகியோர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாலையில் சிதறிய பாட்டில் துண்டுகளை கூடுதல் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு அப்புறப்படுத்தினர். இதனால் சென்னை- பெங்களூரு தேசிய ெநருஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசார் வழக்கு பதிவு

அலமேலுமங்காபுரம், சத்துவாச்சாரி சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. அந்த சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரம் பள்ளி, கல்லூரி வாகனங்கள் சிக்கி தவித்தன. வேலைக்கு செல்பவர்களும் கடும் அவதியடைந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X