ஒட்டன்சத்திரம் அருகே திருமணமான 2 வருடத்தில் இளம்பெண் தற்கொலை

அஜித்குமார் மதுபோதையில் ஜெயலட்சுமியை தாக்கி கொடுமைபடுத்தியதாக ஜெயலட்சுமி குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
ஒட்டன்சத்திரம் அருகே திருமணமான 2 வருடத்தில் இளம்பெண் தற்கொலை
Published on: 
Summary

திருமணமாகி 2 வருடம் தான் ஆகிறது என்பதால் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.

மதுரையைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி உயிரிழந்துவிட்டார். இதனை தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த ஜெயலட்சுமி (வயது 29) என்பவரை 2 வருடங்களுக்கு முன்பு மறுமணம் செய்துள்ளார்.

ஜெயலட்சுமிக்கு அஜித்குமார் 2வது கணவர் ஆவார். திருமணம் முடிந்த பின்பு ஜெயலட்சுமி மற்றும் முதல் மனைவிக்கு பிறந்த 2 மகன்களுடன் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்திநகர் பகுதியில் குடியிருந்து வேலை செய்து வருகிறார்.

தற்கொலை

இதனிடையே அஜித்குமாரின் முதல் மனைவியின் மகன்களால் 2வது மனைவி ஜெயலட்சுமிக்கும், அஜித்குமாருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அஜித்குமார் மதுபோதையில் ஜெயலட்சுமியை தாக்கி கொடுமைபடுத்தியதாக ஜெயலட்சுமி குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் மனஉளைச்சலில் இருந்த ஜெயலட்சுமி இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஆர்.டி.ஓ. விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீசார் விரைந்து வந்து ஜெயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 2 வருடம் தான் ஆகிறது என்பதால் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.

X