இன்ஸ்டாகிராம் காதல் விவகாரம் - பெண் மீது சாணியை கரைத்து ஊற்றி துடைப்பத்தால் தாக்குதல்

கவியரசனுக்கும், காரைக்குடியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் காதல் விவகாரம் - பெண் மீது சாணியை கரைத்து ஊற்றி துடைப்பத்தால் தாக்குதல்
Published on: 
Summary

இன்ஸ்டாகிராம் மூலம் காரைக்குடியில் பல பெண்களை வலையில் வீழ்த்தும் கவியரசன், ஜெயஸ்ரீ, அபிநயா போல் எத்தனை பெண்களை ஏமாற்றி உள்ளார் என்பது குறித்தும் காவல்துறையினர் தற்போது விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கணேசபுரத்தைச் சேர்ந்தவர் அபிநயா. இவருக்கும், தேவகோட்டை அருகேயுள்ள கல்லல் எழுமாபட்டி கிராமத்தைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் கவியரசன் என்பவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அதுவே காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இன்ஸ்டாகிராம்

இதற்கிடையே கவியரசனுக்கும், காரைக்குடியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கவியரசன் அபிநயாவை விட்டு விட்டு ஜெயஸ்ரீயுடன் நெருங்கி பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.​தன் கணவர் பிரிந்து செல்லக் காரணமான ஜெயஸ்ரீ மீது ஆத்திரமடைந்த அபிநயா மற்றும் அவரது சகோதரி அருணாதேவி, தோழி பிரியா ஆகியோர் ஜெயஸ்ரீயை காரைக்குடி 100 அடி சாலையில் நேரில் சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காரைக்குடி

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மூவரும் ஜெயஸ்ரீ மீது தாங்கள் ஏற்கனவே தயாராக கொண்டு வந்திருந்த சாணியைக் கரைத்து ஊற்றி, விளக்கமாற்றால் சரமாரியாக தாக்கியுள்ளனர். பொதுமக்கள் பலரது முன்னிலையில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக ஜெயஸ்ரீ காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார்

அதன்பேரில் போலீசார், அபிநயா மற்றும் அவரது சகோதரி அருணாதேவி, தோழி பிரியா ஆகிய மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் மூலம் காரைக்குடியில் பல பெண்களை வலையில் வீழ்த்தும் கவியரசன், ஜெயஸ்ரீ, அபிநயா போல் எத்தனை பெண்களை ஏமாற்றி உள்ளார் என்பது குறித்தும் காவல்துறையினர் தற்போது விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com