குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு அறிவிப்பு... தேர்வர்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!

இன்றுமுதல் செப்.9ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு அறிவிப்பு... தேர்வர்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
Published on

குரூப்-2 மற்றும் குரூப்-2A பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு வரும் நவம்பர் 1ம் தேதி நடைபெறும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்.,

“ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு II (தொகுதி II மற்றும் ΙΙΑ பணிகள்) க்கான அறிவிக்கை, தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று (11.08.2026) வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் 11.08.2026 முதல் 09.09.2026 பி.ப. வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை யுபிஐ மூலமாகவும் செலுத்தலாம்.

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு II (தொகுதி II மற்றும் IIA பணிகள்) க்கான முதல் நிலைத் தேர்வு 01.11.2026 அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2 மற்றும் குரூப் 2A என்பது தமிழ்நாடு மாநில அரசுப் பணிகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தால் நடத்தப்படும் ஒரு ஒருங்கிணைந்த ஆட்சேர்ப்புத் தேர்வாகும்.

துணைப் பதிவாளர் மற்றும் நகராட்சி ஆணையர் முதல் வருவாய் அலுவலர் மற்றும் தனிப்பட்ட உதவியாளர் வரையிலான பதவிகளுக்கு இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com