தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு

ஆத்திக்கண்ணு என்ற மின் ஊழியர் மின்கம்பத்தை பழுதுபார்க்கும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.மின் ஊழியர் உயிரிழந்த துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு
Published on

தூத்துக்குடி வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஆத்திக்கண்ணு என்ற மின் ஊழியர் மின்கம்பத்தை பழுதுபார்க்கும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், தூத்துக்குடி பகுதி-1 கிராமம், அம்பேத்கார் நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த ஆத்திக்கண்ணு என்பவர் நேற்று, கனமழையினால் சேதமடைந்த கிருஷ்ணராஜபுரம், ஐந்தாவது தெருவில் உள்ள மின்கம்பத்தினை பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com